இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞர் சாவு; 2 பேர் காயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள சேதுநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சரவணகுமார் (30). இவரும் இதே பகுதியைச் சேர்ந்த லி.சுந்தரமூர்த்தியும் (36) இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை வத்திராயிருப்பு-கிருஷ்ணன்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை சரவணக்குமார் ஓட்டி சென்றார்.
சேசபுரம் விலக்கு அருகே சென்ற போது எதிரே வந்த வ.புதுப்பட்டி, இந்திராநகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு இரு சக்கர வாகனமும் சரவணக்குமாரின் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சரவணக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் காயம் அடைந்தனர்.
இது குறித்து கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







