
சிவகாசியில் தனியார் கல்லூரியில் பாரதியார் நினைவு நாள் அனுசரிப்பு
சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் முதுகலை தமிழ்த்துறை சார்பில் புதன்கிழமை பாரதியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் முதுகலை தமிழ்த்துறை சார்பில் புதன்கிழமை பாரதியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு துறைத்தலைவர் க.சிவனேசன் தலைமை வகித்தார். பாரதியார் கல்வி அறிவியல் அறக்கட்டளை இயக்குநர் முனிச்செவல் ராமமூர்த்தி "பார் போற்றும் பாரதி' என்ற தலைப்பில் பேசியதாவது:
பெண்கள் கல்வியறிவு பெற்று, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என பாரதி கூறினார். தற்போது பாரதியின் கனவினை நனவாக்கும் விதமாக ,பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள். நாடு, மொழி, இனம், உலகளாவிய விடுதலை ஆகியவற்றை பற்றி பாரதியார் சிந்தித்ததால், அவர் பார் போற்றும் பாரதியானார் என்றார்.
கல்லூரியில் உள்ள காட்சி தொடர்பியல்துறை சார்பில், "ரௌத்திரம் பழகு', "நான் வீழ்வேன் என நினைத்தாயோ' என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள குறும்படம் திரையிடப்பட்டது.
பாரதியார் பாடல்கள் ஒப்பித்தல் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ந. அருள்மொழி வரவேற்றார். மாணவி பா.அன்னலட்சுமி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





