
சிவகாசி அருகே மின்னல் தாக்கி பட்டாசு ஆலை அறை தரைமட்டம்
சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை அறை இடிந்து முற்றிலும் தரைமட்டமானது.
சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை அறை இடிந்து முற்றிலும் தரைமட்டமானது.
சிவகாசியை அடுத்துள்ள மாரனேரி அருகே தேன்காலனியைச் சேர்ந்தவர் ஜெயகாந்தன். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை அதே பகுதியில் உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை பட்டாசு ஆலையில் வழக்கம் போல தொழிலாளர்கள் பணி முடித்து வீடு திரும்பினர். இந்நிலையில் சிவகாசி பகுதியில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ஆலையில் உள்ள மருந்து கலவை வைத்திருந்த அறையை மின்னல் தாக்கியதில் பெரும் சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. அப்போது தொழிலாளர்கள் யாரும் ஆலையில் இல்லாததால் மிகப் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.இது குறித்து மாரனேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தீப்பெட்டி ஆலையில் தீ: சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் நூர்முகமது என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இதன் வெளிப்புறத்தில் பழைய காகிதக் கழிவுகள் ஏராளமாகக் கொட்டப்பட்டுக் கிடந்தன. அதன் மேலே உயர் மின் அழுத்த கம்பி செல்கிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இக்கம்பியின் மீது மின்னல்
தாக்கியது. இதில் ஏற்பட்ட தீப்பொறிகள் காகிதக் கழிவின் மீது விழுந்து தீப்பிடித்தது. இதில் காகிதங்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. இது குறித்து சிவகாசி டவுண் போலீஸார் வழக்குப் பதிவு
செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




