
மதுபாட்டில்கள் பதுக்கிய இளைஞர் கைது
திருச்சுழியில் மதுபாட்டில்கள் பதுக்கிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து, 70 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
திருச்சுழியில் மதுபாட்டில்கள் பதுக்கிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து, 70 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
திருச்சுழி பகுதிகளில் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு சிலர் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் திருச்சுழி காவல் ஆய்வாளர் தெய்வீகப் பாண்டியன் தலைமையில் புதன்கிழமை இரவு திருச்சுழி பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிள்ளையார் நத்தம் கிராமத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் சாக்குப் பையுடன் வந்த இளைஞரிடம் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக விற்பதற்காக 70 மதுபாட்டில்கள் பதுக்கியிருந்தது தெரிந்தது. மேலும் விசாரணையில் மந்தையூரணியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் விக்னேஷ் பாண்டி(18) என்பதும் தெரிந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






