விருதுநகரில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். இதில் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தபடி புதிய பதவிகளை உடனே அனுமதித்திட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ. 380 வழங்க வேண்டும். பகுதி நேர பணியாளர்களை அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கும் செல்ல அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல், மின் வாரிய ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் பணி காலத்தையும் கணக்கில் கொண்டு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.