சிவகாசியில் உள்ள ஷீல்டு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையிலிருந்து ரயில் நிலையம் செல்லும் ஷீல்டு சாலையில், அரசு மருத்துவமனையின் நுழைவுவாயிலருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வரும் வாகனங்கள் திருத்தங்கல், ஆமத்தூர், விருதுநகருக்கு இச்சாலை வழியே செல்கின்றன. இந்நிலையில், இச்சாலையில் பள்ளம் உள்ளதால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். மேலும், இரவு நேரத்தில் இச்சாலையில் போதிய மின்விளக்கு இல்லாததால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் இச்சாலையிலுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


