/

பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, கணினிப் பொறியியல்

Updated On :24 ஜனவரி 2019, 12:50 am IST

சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, கணினிப் பொறியியல் துறை ஆகியவற்றின் சார்பில் பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரித் தாளாளர் ஆர்.சோலைச்சாமி தலைமை வகித்தார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். தென்கொரியா குஷ்பேக் நதினல் பல்கலைக்கழகப் பேராசிரியர் அனந்தபால், தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிதாக வந்துள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளித்தார். 
முன்னதாக கல்லூரி முதல்வர் கே.கணேசன் வரவேற்றார். பேராசிரியர் ஆர்.அருண் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.