/

பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளதைப் பற்றி...

News image

பெட்ரோல், டீசல் நிலையம்.

Updated On :26 மே 2026, 8:03 am IST

கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மேற்காசிய போர் காரணமாக உலக அளவில் எரிவாயு விநியோகம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான கடுமையான சண்டை காரணமாக கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், போரின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், உலக எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனால், அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், கடந்த மே 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மே 15, 19, 23 மற்றும் நேற்று (மே 25) என நான்கு முறை பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் 5-வது முறையாக இன்று (மே 26) காலை சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.108.01-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.99.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

petrol and diesel prices have been hiked for the fifth time in the past two weeks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.