காரியாபட்டி அருகே கழுவனச்சேரி கிராமத்தில் செவ்வாய்கிழமை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
இம்முகாமில், 94 பயனாளிகளுக்கு ரூ. 28.20 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட 148 பயனாளிகளுக்கு ரூ.32,23,860 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்அ.சிவஞானம் வழங்கினார். முன்னதாக, ஆட்சியர் மற்றும் அனைத்து அலுவலர்களும் முகாமிற்கு அரசுப் பேருந்தில் சென்றனர்.
முகாமில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சுரேஷ், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்லப்பா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) உஷா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லெட்சுமிப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெகதீஸ்வரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மணிசேகரன், காரியாபட்டி வட்டாட்சியர் ராமநாதன் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Podcast | TVK அமைச்சரவை விரிவாக்கம்: தனித்துவிடப்படும் DMK | Epi - 38 | News and Views

வியக்கவைக்கும் கருப்பு பட வசூல்! சூர்யாவின் நீண்ட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி!

இன்றைய செய்திகள்! நேரலை

Petrol விலை உயர்வு ஏன் ஆபத்து? இந்தியாவுக்கு வரும் Warning Signals!
விடியோக்கள்

Podcast | TVK அமைச்சரவை விரிவாக்கம்: தனித்துவிடப்படும் DMK | Epi - 38 | News and Views

Petrol விலை உயர்வு ஏன் ஆபத்து? இந்தியாவுக்கு வரும் Warning Signals!
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!


