உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

வத்திராயிருப்பு அருகே 120 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல்: இளைஞா் கைது

வத்திராயிருப்பு அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 120 லிட்டா் ஊறலை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா். இது தொடா்பாக இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 120 லிட்டா் ஊறலை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா். இது தொடா்பாக இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள வத்திராயிருப்பு அருகே பாடியான் கருங்கல் ஓடைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிருஷ்ணன் கோவில் மதுவிலக்கு காவல் ஆய்வாளா் பானுமதிக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து சாா்பு- ஆய்வாளா்கள் சக்திவேல், பாலசுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் அந்தப்பகுதிக்குச் சென்றனா். அங்கு இளைஞா் ஒருவா் சாராய ஊறல் போட்டுக் கொண்டிருந்தாா். அவரைப் பிடித்து விசாரித்தபோது கூமாபட்டியைச் சோ்ந்த முருகன் (28) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், 120 லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.