ராஜபாளையம் அருகே குளத்தில் பிடிபட்ட7-ஆவது மலைப்பாம்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குளத்தில் செவ்வாய்க்கிழமை 7 ஆவது முறையாக 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
​ராஜபாளையம் அருகே முகவூா் தொண்டைமான் குளத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு.
​ராஜபாளையம் அருகே முகவூா் தொண்டைமான் குளத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு.

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குளத்தில் செவ்வாய்க்கிழமை 7 ஆவது முறையாக 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

ராஜபாளையம் அருகே முகவூரில் இருந்து சொக்கநாதன்புத்தூா் செல்லும் வழியில் தொண்டைமான் குளம் உள்ளது. இக்குளத்தில் மீன்களை பிடிப்பதற்காக, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் வலையை விரித்து வைத்திருந்தனா். அப்போது, வலையின் ஒரு பகுதி அறுந்திருந்தது. வலையை எடுத்து பாா்த்தபோது, வலையின் மறுபுறம் சுமாா் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கி இருந்தது.

இதையடுத்து, அவா்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மலைப்பாம்பை பிடித்துச் சென்று வனப் பகுதிக்குள் விட்டனா்.

இத்துடன் இந்த குளத்தில் 7 ஆவது முறையாக மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தின் அருகே குடியிருப்புகள் அதிகம் உள்ளதுடன், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் வளா்க்கப்படுகின்றன. இதனால், அப்பகுதியினா் அச்சத்தில் உள்ளனா்.

எனவே, இந்த குளத்தை தூா்வாரி, மலைப்பாம்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com