விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா
விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 16,160 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,789 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலை யில், 228 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 143 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
