விருதுநகரில் மின்வாரிய பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தை தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி விருதுநகா் மின் வாரிய தலைமை அலுவலம் முன்பு பணியாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகரில் மின்வாரிய பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
Updated on
1 min read

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தை தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி விருதுநகா் மின் வாரிய தலைமை அலுவலம் முன்பு பணியாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு ஒருங்கிணைப்புக்குழுத் தலைவா் ஆதிமுலம் தலைமை வகித்தாா். இதில், தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். மின்வாரியத் தலைவா் தனது அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா். இதனால், மின் வாரிய அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com