அருப்புக்கோட்டை அருகே லாரி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் கிராவல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி நிலை தடுமாறி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
அருப்புக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிலை தடுமாறி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி
அருப்புக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிலை தடுமாறி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி
Updated on
1 min read

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் கிராவல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி நிலை தடுமாறி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள மல்லம்பட்டியில் இருந்து கிராவல் மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று கரிசல்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாம். லாரியை புலியூரான் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஓட்டினாராம்.

இந்நிலையில் செவ்வாயன்று இரவு சுமார் 7 மணிக்கு, அந்த லாரி அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ரயில்வே மேம்பாலம் அருகே திடீரென சாலையிலிருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி, சாலையின் மையத் தடுப்பில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். 

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com