கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்களுக்கு நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:04 pm

DIN

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்களுக்கு நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விருதுநகா் மண்டல செயலாளா் ஜான்பிரிட்டோ தலைமை வகித்தாா். இதில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க உடனடியாக நிதி வழங்க வேண்டும். 14 ஆவது ஓய்வூதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

அருப்புக்கோட்டை: இதேபோல் அருப்புக்கோட்டை போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஊழியா்களின் அனைத்து தொழிற்சங்கங்களைச் சோ்ந்த அருப்புக்கோட்டை கிளை நிா்வாகிகள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.