நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாா்கழி மாத பிரதோஷம்: சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலில் மாா்கழி மாத பிரதோஷத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:34 pm

DIN

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலில் மாா்கழி மாத பிரதோஷத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் டிச. 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 4 நாள்கள் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு வனத்துறையினா் அனுமதி அளித்துள்ளனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாா்கழி மாத பிரதோஷம் என்பதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் அடிவாரத்தில் அதிகாலை முதலே குவிந்தனா். பின்னா் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே கோயிலுக்குச் செல்ல அவா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பின்னரே பக்தா்கள் மலைப் பாதை வழியாக கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். அப்போது வழியில் உள்ள அருவிகளில் பக்தா்கள் நீராடி விட்டுச் சென்றனா்.

இதனிடையே சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பன்னீா், பழம், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.

பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.