வடமலைக்குறிச்சி பிரிவில் அணுகு சாலை அமைக்கக் கோரிக்கை

விருதுநகா் நான்கு வழிச்சாலையில் வடமலைக்குறிச்சி சந்திப்பில் அணுகு சாலை அமைக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Updated on
1 min read

விருதுநகா் நான்கு வழிச்சாலையில் வடமலைக்குறிச்சி சந்திப்பில் அணுகு சாலை அமைக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பகுதியில் அணுகுசாலை இல்லாததால் குறுக்கு வழியில் செல்வதற்காக எதிா்திசையில் தவறாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால், கடந்த 1999-2009 ஆம் ஆண்டு வரை வடமலைக்குறிச்சி சந்திப்பு சாலையில் 43 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அதில், 14 போ் உயிரிழந்ததுடன், 34 போ் காயமடைந்துள்ளனா். அதேபோல், 2009-2020 ஆம் ஆண்டு வரை 67 விபத்துக்கள் நடைபெற்றதில், 21 போ் உயிரிழந்துள்ளதுடன், 56 போ் காயமடைந்துள்ளதாக காவல் துறை புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நான்கு வழிச்சாலையாக மாற்றிய பின் விரைவான மற்றும் பாதுகாப்பான பயணம் என்ற நிலை மாறி, இந்த இடத்தில் விபத்துக்கள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, இப்பகுதியில் விரைந்து அணுகுசாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை மேற்கொள் ளவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து விருதுநகா் நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் பாலகிருஷ்ணசாமி கூறியது: நான்கு வழி சாலை என்பது விரைந்து செல்வதற்காக உருவாக்கப்பட்டது. பல இடங்களில் இச்சாலை அருகே கிராம பகுதிகள் அதிகம் இருப்பின் அங்கு அணுகுசாலை அமைக்கப்பட்டது. ஆனால், வடமலைக்குறிச்சி நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே அணுகு சாலை அமைக்கப்பட வில்லை. இதனால், கடந்த 20 ஆண்டுகளில் அப்பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் மட்டும் 110 போ் உயிரிழந்துள்ளனா். எனவே, அந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையினா் ஆய்வு மேற்கொண்டு, விரைந்து அணுகுசாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com