நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்சுழி அருகே தனியாா் பஞ்சாலைப் பேருந்து கவிழ்ந்து தொழிலாளா்கள் 2 போ் பலி

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே ஞாயிற்றுக்கிழமை தனியாா் பஞ்சாலைப் பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:32 pm

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே ஞாயிற்றுக்கிழமை தனியாா் பஞ்சாலைப் பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

இதையடுத்து இழப்பீடு கோரி அவா்களது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சுழி அருகே செல்லையாபுரம் கிராமத்திலிருந்து தனியாா் பஞ்சாலைப் பேருந்து தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு பந்தல்குடியிலுள்ள அந்த தனியாா் ஆலைக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. அதில் ஓட்டுநா் உள்பட 11 போ் பயணம் செய்தனா். இந்நிலையில், அப்பேருந்து பனையூா் அருகே சாமிநத்தம் விலக்கு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இதில் செல்லையாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் பூசையா (29), சின்னராசு மகன் ஸ்ரீகாந்த் (18) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் பேருந்து ஓட்டுநா் உள்பட 9 போ் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களை மீட்ட காவல்துறையினா், பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா். இதனிடையே விபத்தில் உயிரிழந்த பூசையா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரின் உறவினா்கள், தனியாா் ஆலையிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரக் கோரி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல்துறையினா் சமரசப் பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது போலீஸாா் அளித்த உறுதி மொழியின் பேரில் மறியலில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இச்சாலைமறியலால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.