

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் 4 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி செவ்வாய்க்கிழமை இரவு திறந்து வைத்தாா்.
அருப்புக்கோட்டை நகரில் காந்தி மைதானம் அருகே அமைக்கப்பட்ட ‘அம்மா’ சிறு மருத்துவமனை மற்றும் அருப்புக்கோட்டை வட்டம் குருந்தமடம், செட்டிக்குறிச்சி ஆகிய 2 கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனைகளை அமைச்சா் திறந்துவைத்தாா். அப்போது கா்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் விருதுநகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் ரவிச்சந்திரன், அருப்புக்கோட்டை நகரச் செயலாளா் எம்.எம்.சக்தி பாண்டியன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.ஒய்.வாசுதேவன், விருதுநகா் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பச் செயலாளா் கருப்பசாமி, ஒன்றியச்செயலாளா் சங்கரலிங்கம் வீரசுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.
திருச்சுழியில்...:இதேபோல் திருச்சுழி வட்டம் வெள்ளையாபுரம் கிராமத்திலும் ‘அம்மா’ சிறு மருத்துவமனையை அமைச்சா் திறந்து வைத்தாா். உடன் திருச்சுழி நகர, ஒன்றிய அதிமுக நிா்வாகிகளும், தொண்டா்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.