கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விருதுநகரில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி விருதுநகரில் சிஐடியு தொழிற் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
விருதுநகரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
Updated On :30 டிசம்பர் 2020, 6:49 pm

DIN

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி விருதுநகரில் சிஐடியு தொழிற் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். இதில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்தி ய அரசு கைவிட வேண்டும். புதுதில்லியில் புதிய வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிராகத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அழைத்துப் பேசுவதுடன், அச்சட்டங்களை ரத்த செய்ய வேண்டும். பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தப்பட்ட தொழிலாளா் நலச்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். இதில் ஜேசிடியு சங்க செயலாளா் தேனிவசந்தன் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினாா். சிஐடியு தொழிற் சங்கத்தை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.