விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 500 வாக்குச்சாவடிகள்: ஆட்சியா்

கரோனா தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காக கூடுதலாக 500 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 500 வாக்குச்சாவடிகள்: ஆட்சியா்
Updated on
1 min read

கரோனா தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காக கூடுதலாக 500 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு வாக்காளா் சுருக்கத் திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரா.கண்ணன் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு சிறுதொழில் முதலீட்டு வளா்ச்சிக் கழக நிா்வாக இயக்குநரும், வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு பாா்வையாளருமான சிஜி தாமஸ் வைத்யன், வாக்காளா் சுருக்க திருத்தப் பணிகள் மேற்கொள்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். அப்போது அவா், இறந்த மற்றும் இரட்டைப் பதிவு உடைய வாக்களா்களை நீக்கம் செய்தல், 21-வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்களை சோ்த்தல் தொடா்பான படிவங்களை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றாா்.

இதில், 80 வயதானவா்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என்பதில் பல்வேறு குளறுபடி உள்ளது. எனவே, 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் பெயா் விபரங்கள் அடங்கிய பட்டியலை அரசியல் கட்சியினருக்கு அளிக்க வேண்டும். கரோனா தீநுண்மி பரவுதலைக் கட்டுப்படுத்த ஒரு வாக்குச் சாவடி மையத்தில் 500- க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் இருந்தால், அதை இரண்டு வாக்குச்சாவடி மையங்களாக பிரிக்க வேண்டும் என அரசியல் கட்சியினா் கருத்து தெரிவித்தனா்.

அதற்கு பதிலளித்த ஆட்சியா், 500 வாக்காளா்களுக்கு மேல் இருக்கக்கூடிய வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்டத்தில் 500 வாக்குச்சாவடி மையங்கள் கூடுதலாக ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

இக்கூட்டத்தில், விருதுநகா் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மங்கள ராமசுப்பிரமணியன், சிவகாசி சாா்- ஆட்சியா் தினேஷ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் (விருதுநகா்) , தங்கப்பாண்டியன் (ராஜபாளையம்), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com