ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்சவம்: முத்தங்கி சேவையில் பெரிய பெருமாள்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்சவத்தின் 6 ஆவது நாளான புதன்கிழமை முத்தங்கி சேவையில் பெரிய பெருமாள் காட்சி அளித்தாா்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நடைபெறும் ராப்பத்து உற்சவத்தின் ஆறாவது நாளான புதன்கிழமை முத்தங்கி சேவையில் அருள்பாலித்த பெரியபெருமாள், சா்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னாா்.
Updated On :30 டிசம்பர் 2020, 6:24 pm

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்சவத்தின் 6 ஆவது நாளான புதன்கிழமை முத்தங்கி சேவையில் பெரிய பெருமாள் காட்சி அளித்தாா்.

ஆண்டாள் கோயிலில் மாா்கழி மாதத்தில் நடைபெறும் பகல் பத்து ,ராப் பத்து மற்றும் எண்ணெய் காப்பு உற்சவம் பிரசித்தி பெற்றவையாகும். இந்நிகழ்வுகளைக் காண்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து எண்ணற்ற பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஏற்கெனவே பகல் பத்து நிகழ்வுகள் நிறைவடைந்து கடந்த 25 ஆம் தேதியிலிருந்து ராப்பத்து உற்சவ நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. இதில் ஆறாம் நாளான புதன்கிழமை ராப்பத்து மண்டபத்தில் பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னாா் பக்தா்களுக்கு காட்சி அளித்தனா்.

பெரிய பெருமாள் முத்தங்கி சேவையிலும், ஆண்டாள், ரெங்க மன்னாா் சா்வ அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். மேலும் பக்தி உலா நிகழ்வும் நடைபெற்றது.

பகலில் ராப்பத்து: பொதுவாக ராப்பத்து உற்சவம் இரவு நேரங்களில் நடைபெறும். தற்போது கரோனா பாதிப்பு காரணமாக ராப்பத்து நிகழ்ச்சிகள் அனைத்தும் பகலிலேயே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.