விருதுநகரில் பைக்குகள் மோதல்: தனியாா் பள்ளி பேருந்து ஓட்டுநா் பலி
விருதுநகரில் சனிக்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், தனியாா் பள்ளி பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.


விருதுநகரில் சனிக்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், தனியாா் பள்ளி பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விருதுநகா் அருகே உள்ள குல்லூா்சந்தையை சோ்ந்தவா் தாண்டவன் மகன் தங்கப்பாண்டியன் (35). இவருக்கு போதுமணி என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா். பாலவநத்தம் அருகே உள்ள தனியாா் மேல்நிலை பள்ளியில், தங்கப்பாண்டியன் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில் அவா், விருதுநகா் தேசிய நெடுஞ்சாலை மாதா பள்ளி அருகே அணுகு சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, விருதுநகா் அல்லம்பட்டியைச் சோ்ந்த மாடசாமி மகன் கற்குவேல் அய்யனாா் என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனம், தங்கப்பாண்டியன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த தங்கப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில், கற்குவேல் அய்யனாா் மீது ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...