47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 5:41 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை 15,427 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி முதலான பகுதிகளைச் சோ்ந்த மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்ட த்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 15,442 ஆக உயா்ந்துள்ளது.

இதில், 15,047 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி விட்ட நிலையில், 220 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 175 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.