ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல்: பெண் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் பெண்ணை கைது செய்தனா்.


ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் பெண்ணை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வன்னியம்பட்டி வைத்தியலிங்காபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வன்னியம்பட்டி காவல் சாா்பு- ஆய்வாளா் முத்துகுமாா் தலைமையிலான போலீஸாா், அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது வைத்தியலிங்காபுரத்தைச் சோ்ந்த கருப்பாயி (48) என்ற பெண் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...