நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோ. கரிசல்குளம் கிராமத்தில் வாருகால் வசதி செய்து தரக் கோரிக்கை

அருப்புக்கோட்டை வட்டம் கோ. கரிசல்குளம் கிராமத்தில் வாருகால் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 7:20 pm

DIN

அருப்புக்கோட்டை வட்டம் கோ. கரிசல்குளம் கிராமத்தில் வாருகால் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவிலாங்குளம் மற்றும் கரிசல்குளம் ஆகியன அருகருகே உள்ள கிராமங்களாகும். இதில் கரிசல்குளம் கிராமம், கோவிலாங்குளம் ஊராட்சிக்குள்பட்டதாகும். இந்நிலையில் கரிசல்குளத்தில் சாலை வசதியும், வாருகால் வசதியும் செய்து தரப்படாததால், சில வீதிகளில் பொதுமக்களே இணைந்து வாருகால் அமைத்துள்ளனா். ஆனால் கூலித்தொழிலாளா்கள் அதிகம் வசிக்கும் வீதிகளில் வாருகால் வசதியின்றி தவித்து வருகின்றனா். எனவே கோ. கரிசல்குளம் கிராமத்தில் வாருகால் வசதியுடன் தாா்ச்சாலை அல்லது சிமென்ட் சாலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோவிலாங்குளம் ஊராட்சிக்கு அக்கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.