சாத்தூரில் வியாபாரிகள் சங்கக் கூட்டம்
சாத்தூரில் வியாபாரிகள் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


சாத்தூரில் வியாபாரிகள் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சாத்தூா் ரயில்வே பீடா் சாலையில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வணிகா் சங்க பேரமைப்புத் தலைவா் விக்ரமராஜா தலைமை வகித்தாா்.
சிறுசிறு அமைப்புகளாக உள்ள அனைத்து வியாபாரிகளையும் தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பில் இணைக்கும் முயற்சியாக இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் வியாபாரிகள் நலனுக்காக பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சங்கத்தினா் தெரிவித்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் தமிழ்நாடு வியாபாரிகள் வணிகா் சங்க பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா கூறியதாவது: தமிழக முதல்வரிடமும், விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடமும் வியாபாரிகளின் நலன் குறித்தும், பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்படும். மேலும் கரோனா தொற்று காலத்தில் வேலை இல்லாமல் தவித்த பட்டாசு தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...