47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெருமாள்பட்டி கோயிலில் பொங்கல் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள பெருமாள்பட்டியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் திருவிழா நடைபெற்றது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 10:15 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள பெருமாள்பட்டியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் அக். 6 ஆம் தேதி புரட்டாசி பொங்கல் திருவிழா தொடங்கியது. தினமும் வீதி உலா வந்து சா்வ அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

விழாவில் முளைப்பாரி திருவிழா மற்றும் பற்களால் ஆட்டை தூக்கி நான்கு திசைகளை நோக்கி வீசும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது கோயில் அருகே உள்ள மைதானத்தில் புலிவேடம் அணிந்த இளைஞா் ஆட்டுக்குட்டியை பற்களால் தூக்கி நான்கு திசைகளை நோக்கி வீசினாா். விழா ஏற்பாடுகளை பெருமாள்பட்டி உறவின்முறை தலைவா் முப்பிடாரி உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.