திருமலைபுரத்தில் தடையை மீறி பால்குடம் எடுத்துச்சென்ற பெண்கள்: காவல்துறை தடுப்பு

திருமலைபுரம் கிராமத்திலிருந்து வெள்ளிக்கிழமை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னிற்கு பால்குடம் எடுத்துச்சென்ற 100க்கு மேற்பட்ட பெண்களை காவல்துறை உயரதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
தடை உத்தரவை மீறி வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்துச்சென்ற திருச்சுழிஅருகே திருமலைபுரம் கிராமப் பெண்கள் 100க்கு மேற்பட்டோரை  போலீசார் தடுத்து நிறுத்தினர்.  
தடை உத்தரவை மீறி வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்துச்சென்ற திருச்சுழிஅருகே திருமலைபுரம் கிராமப் பெண்கள் 100க்கு மேற்பட்டோரை  போலீசார் தடுத்து நிறுத்தினர்.  

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்த கானாவிலக்கு கிராமம் அருகே உள்ள  திருமலைபுரம் கிராமத்திலிருந்து வெள்ளிக்கிழமை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னிற்கு பால்குடம் எடுத்துச்சென்ற 100க்கு மேற்பட்ட பெண்களை காவல்துறை உயரதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு ஆண்டுதோறும்  பால்குடம் எடுத்து,பாலபிஷேகம் செய்து பெண்கள் வழிபடுவது அப்பகுதி சுற்றுவட்ட கிராமத்தினரின் வழக்கம்.

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக பொது இடங்களில் 100க்கு மேற்பட்டோர் நெருக்கமாகக் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளதால், பசும்பொன்னில் தேவர்சிலைக்கு பாலபிஷேகம் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  வெள்ளிக்கிழமை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு காவல்துறை உயரதிகாரிகள் பசும்பொன்னைச் சுற்றிலும் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே திருச்சுழி அருகே கானாவிலக்கை அடுத்துள்ள திருமலைபுரம் கிராமத்திலிருந்து வெள்ளிக்கிழமை சுமார் 100க்கு மேற்பட்ட பெண்கள் ஒன்றாகக்கூடி பால்குடம் எடுத்துச்செல்ல முயன்றனர். இதையறிந்த அப்பகுதி காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

ஆனால் அப்பெண்கள் காவல்துறையின் தடையை ஏற்காமல் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சாலை மறியல் செய்யவும் முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கண்காணிப்புப் பணியில் இருந்த காவல்துறை உயரதிகாரிகளான விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் உள்ளிட்டோர் தகவலறிந்து, நிகழ்விடத்திற்கு நேரில் சென்று அப்பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பால்குடம் எடுத்துச் செல்லவும், பாலபிஷேகம் செய்யவும் உள்ள தடை குறித்து எடுத்துக் கூறினர். இதனால் அப்பெண்கள் மறியல் முயற்சியைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். அதேசமயம் காவல்துறை சென்றபிறகு காவல்துறை மீது நம்பிக்கையில்லாமல் ஓரிருவராக அப்பெண்கள் பசும்பொன்னிற்கு தனித்தனியே பால்குடம் எடுத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com