கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் காவல் நிலைய மின் இணைப்பை துண்டித்த மின் ஊழியர்கள்

மின்வாரிய ஊழியரின் இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் கூமாபட்டி காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரத்தை துண்டித்து பழி வாங்கிய இருவருக்கு மின்சாரத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

News image
கூமாபட்டி காவல்நிலையம்
Updated On :4 செப்டம்பர் 2020, 1:26 pm

DIN

மின்வாரிய ஊழியரின் இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் கூமாபட்டி காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரத்தை துண்டித்து பழி வாங்கிய இருவருக்கு மின்சாரத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்  கடந்த மாதம்  30 ஆம் தேதி   அந்த வழியாக வந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் சைமன் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர  வானத்தை சோதனை செய்தார்.

அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமலும், ஒரே வாகனத்தில் 3 பேர் பயணம் செய்த காரணத்தினாலும் இரு சக்கர  வாகனத்தை காவலர் பறிமுதல் செய்தார்.

பின்னர் இது குறித்து  மின்வாரிய ஒப்பந்த  ஊழியர் சைமன்  உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் புகார் தெரிவித்த நிலையில் கூமாப்பட்டி காவல் நிலையத்தின்   மின் வயரை  மின் வாரிய ஊழியர்கள் துண்டித்ததாக கூறப்படுகிறது.

மின்சாரம் துண்டிப்பால்  2 மணி நேரம் காவல் நிலையம் இருளில் மூழ்கியது. இதுகுறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மின்வாரிய அதிகாரிகளிடம்  புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் உதவி மின் பொறியாளர் கோபால்சாமி மற்றும் தற்காலிக மின்வாரிய ஊழியர் தங்கேஸ்வரன் ஆகிய 2 பேருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக உதவி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.