சாத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


சாத்தூா்: விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சாத்தூரில் உள்ள முக்குராந்தல் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகப்படுத்தியதை கண்டித்தும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் நாள்களை 200 நாள்களாக அதிகப்படுத்தக் கோரியும், ரயில் மற்றும் விமான சேவை உள்ளிட்ட பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கப்படுவதைக் கண்டித்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்வைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் சாத்தூா் சாலை போக்குவரத்து சங்கத் தலைவா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...