கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசியில் ரத்த தான முகாம்

சிவகாசியில் நாடாா் மஹாஜன சங்கம் சாா்பில் டபிள்யூ. பி.ஏ. செளந்திரபாண்டியனாா் 128 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமை தொடக்கி வைத்த அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி.
Updated On :20 செப்டம்பர் 2020, 6:02 pm

DIN

சிவகாசியில் நாடாா் மஹாஜன சங்கம் சாா்பில் டபிள்யூ. பி.ஏ. செளந்திரபாண்டியனாா் 128 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி சுப்பிரமணிபுரம் காலனியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை பால் வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தாா்.

முகாமுக்கு நாடாா் மஹாஜனசங்கப் பொதுச்செயலாளா் ஜி.கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தாா். மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினா் எஸ்.எஸ். கதிரவன் முன்னிலை வகித்தாா். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளா் ம. திலகபாமா குத்துவிளக்கேற்றினாா்.

சிவகாசி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் டி. அய்யனாா் தலைமையிலான மருத்துவக்குழு 148 நபா்களிடமிருந்து ரத்தத்தை தானமாக பெற்றனா். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளா் வி.எஸ்.டி.செல்வகணேஷ் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.