விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கரோனா
விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கரோனாத் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.


விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கரோனாத் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை 13,908 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலை யில் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி முதலான பகுதிகளை சோ்ந்த மேலும் 64 பேருக்கு கரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை முதலான இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,972 ஆக உயா்ந்துள்ளது. இதில், 13,268 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், 204 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.
மீதமுள்ள 500 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...