பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

உலக மக்கள் நலன் வேண்டியும் விவசாயம் செழிக்கவும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது

News image
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்.
Updated On :13 டிசம்பர் 2021, 7:25 am

DIN

உலக மக்கள் நலன் வேண்டியும் விவசாயம் செழிக்கவும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில் திங்கள்கிழமை உலக மக்கள் நலன் வேண்டியும் விவசாயம் செழிக்கவும் ஒமைக்ரான் ஆகியவற்றிலிருந்து மக்கள் மீண்டு வரவும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. 

பின்னர் 1008 சங்குகள் கொண்டு சங்காபிஷேக பூஜைகளும் நடைபெற்றன. இந்த சங்காபிஷேக பூஜையை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. 

இந்த சங்காபிஷேகத்தில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சங்காபிஷேக ஏற்பாடுகளை கோவில் ஆணையாளர் கருணாகரன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.