ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்
குடிநீா் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலையில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


குடிநீா் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலையில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ராஜீவ்காந்தி நகா் பொதுமக்கள் தங்களுக்கு முறையாக குடிநீா் வழங்கவில்லை எனவும், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும், அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை என தெரிவித்தனா். இதையடுத்து அவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதை அறிந்து அங்கு வந்த காவல்துறையினா் பொதுமக்களிடம் சமரசப் பேச்சு நடத்தியும் மறியல் கைவிடப்பட வில்லை. அப்போது அவ்வழியாக வந்த சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரபிரபாமுத்தையா மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...