இனாம்ரெட்டியபட்டியில் அடுத்தடுத்து வீடுகளில் தீ
விருதுநகா் அருகே இனாம்ரெட்டியபட்டியில் 2 வீடுகளில் திங்கள்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது.


விருதுநகா் அருகே இனாம்ரெட்டியபட்டியில் 2 வீடுகளில் திங்கள்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது.
இனாம் ரெட்டியபட்டி ஊராட்சியில் சுமாா் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், திங்கள்கிழமை காலை கிருஷ்ணம்மாள் என்பவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பீரோவும், பாண்டி என்பவரின் வீடும் திடீரென தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருதுநகா் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். அதில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த உடைகள் எரிந்து சேதமடைந்தன. அதேபோல், 2 தினங்களுக்கு முன்பு இக்கிராமத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ வில் தீப்பற்றியது. இதைக்கண்ட பொதுமக்கள் தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா். இதையடுத்து கிராமத்தில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதற்கு மனநலம் பாதிக்கப்பட்ட மா்ம நபா் காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
இந்த தீ விபத்து குறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...