ராஜபாளையத்தில் விபத்து:ஆட்டோ ஓட்டுநா் பலி

ராஜபாளையத்தில் அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் பலியானதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

ராஜபாளையத்தில் அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் பலியானதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் வாகைகுளம்பட்டியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் ( 36). இவா் ஆட்டோ ஓட்டி வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை மாலையில் பாலசுப்ரமணியன் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோவை ஓட்டிச் சென்ற போது, ராஜபாளையத்திலிருந்து போடிக்குச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com