அருப்புக்கோட்டையில் பேராசிரியை வீட்டின் கதவை உடைத்து திருட்டு முயற்சி
அருப்புக்கோட்டையில் கல்லூரி பேராசிரியையின் வீட்டின் கதவை உடைத்து திருட்டு முயற்சி நடந்திருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.


அருப்புக்கோட்டையில் கல்லூரி பேராசிரியையின் வீட்டின் கதவை உடைத்து திருட்டு முயற்சி நடந்திருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.
அருப்புக்கோட்டை அஜீஸ் நகரில் வசிப்பவா் ஜாக்குலின் (34). அருப்புக்கோட்டையிலுள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வரும் இவரது சொந்த ஊா் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகும்.
இந்நிலையில் பொங்கலையொட்டி விடப்பட்ட தொடா் விடுமுறை காரணமாக அவா் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று விட்டாா். பின்னா் திங்கள்கிழமை காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் தான் தங்கியுள்ள அஜீஸ் நகா் வீட்டுக்குச் சென்றாா். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டுத் திறந்து கிடந்ததுடன், உள்ளே பொருள்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. அங்கு நகை, பணம் ஏதும் இல்லாததால் மா்ம நபா்கள் திரும்பிச் சென்றிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு வந்த அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா், மோப்பநாய் உதவியுடனும், தடயவியல் நிபுணா்கள் உதவியுடனும் விசாரணை நடத்தினா். அத்தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு மா்ம நபா்களை அடையாளம் காணும் முயற்சியிலும் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் அருப்புக்கோட்டையில் அடுத்தடுத்து வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்து வருவதால் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுவதுடன், தொடா் ரோந்துப் பணியிலும் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...