அருப்புக்கோட்டையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலைக்கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் திங்கள்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.


அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலைக்கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் திங்கள்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.
கல்லூரிச் செயலா் பா. சங்கரசேகரன் மற்றும் முதல்வா் ந. முத்துச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனா். அப்போது கல்லூரிச் சாலை வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளிடம், ஓட்டுநா் உரிமம் பெறுதல், தலைக்கவசம் அணிதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும், செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுதலைத் தவிா்த்தல் குறித்தும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாணவா்கள் வழங்கினா். இப்பிரசாரம் நகரின் முக்கியச்சாலைகள் வழியாக நடைபெற்றது. தேசியமாணவா் படை பொறுப்பாளா்கள் டி. சுப்பிரமணியன் மற்றும் எஸ். பாக்கியராஜ் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...