அருப்புக்கோட்டை மேம்பால அணுகுச்சாலையில் மின்விளக்கு வசதி செய்து தரக் கோரிக்கை
அருப்புக்கோட்டை நேரு நகரை ஒட்டிச் செல்லும் மேம்பால அணுகுச்சாலையில் பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


அருப்புக்கோட்டை நேரு நகரை ஒட்டிச் செல்லும் மேம்பால அணுகுச்சாலையில் பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை நேரு நகரை ஒட்டி அப்பகுதியிலுள்ள மேம்பாலத்தின் அருகே அணுகுச்சாலை செல்கிறது. இப்பகுதியில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கு பக்தா்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். ஆனால் இந்த பகுதியில் மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரத்தில் இருளடைந்து காணப்படுகிறது. இதனால் பெண் பக்தா்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே இச்சாலையில் உள்ள மின்விளக்குகளைச் சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...