கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

லாரியில் பைக் மோதி விபத்து: பொறியியல் கல்லூரி மாணவா் பலி

சிவகாசியில் திங்கள்கிழமை லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:14 pm

DIN

சிவகாசியில் திங்கள்கிழமை லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே தேவா்குளம் சக்தி நகரைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் மகன் முத்துரிஷி (21). இவா் இங்குள்ள பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில் இவா் தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசி சோ்மன் சண்முகம் சாலையில் உள்ள பள்ளி அருகே சென்றபோது, முன்னால் சென்ற தண்ணீா் லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளாா். அப்போது லாரி மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முத்துரிஷி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்தப் புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான தாயில்பட்டியை சோ்ந்த ராஜேஸ்வரனை (27) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.