47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விருதுநகர் அருகே மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் தீ விபத்து: 4 பேர் படுகாயம்

விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் மணி மருந்து கலவை உராய்வு காரணமாக சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image
தீவிபத்து ஏற்பட்ட மத்தாப்பு தீக்குச்சி ஆலை.
Updated On :13 மார்ச் 2021, 1:32 pm

DIN

விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் மணி மருந்து கலவை உராய்வு காரணமாக சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் விசாக் என்பவருக்கு சொந்தமான துர்கா வண்ண மத்தாப்பு தீக்குச்சி தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை தொழிலாளர்கள் தீக்குச்சிகளை உணர வைப்பதற்காக அடுக்கி வைத்துள்ளனர். 

அப்போது மணி மருந்து கலவை உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு அறைகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் குருமூர்த்தி நாயக்கன் பட்டியை சேர்ந்த வீராச்சாமி, முத்துலாபுரம் நடராஜன், ஆமத்தூர் புது ராஜா ஆகியோர் 100 சதவீத காயமடைந்தனர். 

மேலும் குருமூர்த்தி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண் 50 சதவீத காயமடைந்தார். இதையடுத்து நான்கு பேரையும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.