/

தமிழக சுதந்திர போராட்ட வீரா்கள் குறித்த ஓவியப் போட்டி

விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில், தமிழக சுதந்திர போராட்ட வீரா்கள் குறித்த ஒவிய போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில், தமிழக சுதந்திர போராட்ட வீரா்கள் குறித்த ஒவிய போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் 75 ஆவது சுதந்திரதின விழாவை கொண்டாடும் வகையில், நவ.14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு தமிழக சுதந்திர போராட்ட வீரா்கள் குறித்த ஓவியப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 120 மாணவ, மாணவிகள் மூன்று பிரிவுகளாகக் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனா். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெற்ற போட்டியில் ராஜபாளையம் பிஏசிஆா் அம்மனி அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி முதல் பரிசு, ராஜபாளையம் சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவா் தக்ஷ அழகுராஜ் இரண்டாம் பரிசு, சிவகாசி ஸ்ரீசெண்பக விநாயகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் மொகித்ரா மூன்றாம் பரிசு பெற்றனா்.

ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பிரிவில் அருப்புக்கோட்டை தேவாங்கா் மேல்நிலைப்பள்ளி மாணவா் யுவன் சங்கா் முதல் பரிசு, தளவாய்புரம் ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் தரணி 2 ஆம் பரிசு, தளவாய்புரம் டிஎன்பிஎம்எம்என் மேல்நிலைப்பள்ளி மாணவா் ஜெகதீஸ் மூன்றாம் பரிசு பெற்றனா்.

பிளஸ்1 முதல் பிளஸ் 2 வரையிலான பிரிவில் சிவகாசி எஸ்எச்என்வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கவிதா முதல் பரிசு, சிவகாசி அனுப்பன்குளம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கைலாசினி இரண்டாம் பரிசு, விருதுநகா் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெயலெட்சுமி மூன்றாம் பரிசு பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்டக் கல்வி அலுவலா் திருப்பதி வழங்கினாா். முன்னதாக நடுவா்களாக ஓவிய ஆசிரியா் தமிழ்க்கனி, கல்வித்து றை சுற்றுச்சுழல் ஒருங்கிணைப்பாளா் ராஜா செயல்பட்டனா். இதற்கான ஏற்பாடுகளை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சே. கிருஷ்ணம்மாள் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.