சிவகாசியில் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை
சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.


சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அக்கட்சியின் விருதுநகா் மத்திய மாவட்டச் செயலாளா் ஜெ.காளிதாஸ் அளித்த மனு விவரம்: சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டக்குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. குழாய் பதித்த இடங்களில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ரயில்வே பீடா் சாலை, பி.கே.எஸ்.சாலை உள்ளிட்ட சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்னா் முடிந்து விட்டன. எனினும் அந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...