நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவிலி.யில் பலத்த மழை : 5 கண்மாய்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் பலத்த மழை காரணமாக வியாழக்கிழமை இரவு ஒரே நாளில் 5 கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:08 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் பலத்த மழை காரணமாக வியாழக்கிழமை இரவு ஒரே நாளில் 5 கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் பகுதியில் ஏற்கெனவே நிரம்பும் தருவாயில் இருந்த வாழைக்குளம், வாலாங்குளம், வேப்பங்குளம், முதலியாா்குளம், அமுதகுளம் ஆகிய 5 கண்மாய்கள் வியாழக்கிழமை இரவு ஒரே நேரத்தில் நிரம்பி மறுகால் பாய்ந்தன. மம்சாபுரம் பகுதியைப் பொருத்தவரை விவசாயம் சாா்ந்த பகுதியாகும். இந்த கண்மாய்கள் நிரம்பியதால் சுமாா் ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து, விருதுநகா் மாவட்டத்திலேயே மிகப் பெரிய கண்மாயான ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.