தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோயிலாறு அணைப்பகுதியில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

வத்திராயிருப்பு அருகே கோயிலாறு அணைப்பகுதியில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 9:13 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு அருகே கோயிலாறு அணைப்பகுதியில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது பெரியாறு மற்றும் கோயிலாறு அணை. பெரியார் அணை 47 அடி முழு கொள்ளளவும், கோயிலாறு அணையானது 42 அடி முழு கொள்ளளவு கொண்டது.

Story image

இந்நிலையில் இப்பகுதியில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக இரு அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் பின்னர் பாசன வசதிக்காக நீரானது திறக்கப்பட்டது. தற்போது 42 அடி முழு கொள்ளளவு கொண்ட கோயிலாறு அணையின் நீர்மட்டம் 18 அடியாக உள்ளது.

இந்த இரு அணைகளிலும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு பின்னர் மீன்கள் வளர்ந்த பின்பு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கோயிலாறு அணைப்பகுதியில் ஜிலேபி, சிசி, கென்னட, விரால் உள்ளிட்ட லட்சக்காண மீன்கள் தற்போது திடீரென செத்து மிதக்கின்றது. 

இந்த மீன்கள் அணைப்பகுதி முழுவதுமே செத்து மிதக்கின்றன. இந்த மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மீன்கள் ஏன் செத்து கிடக்கின்றன? தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மீன்கள் இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், செத்து மிதக்கும் மீன்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.