47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சொத்துவரி உயா்வைக் கண்டித்து சிவகாசியில் பாஜக ஆா்ப்பாட்டம்

தமிழக அரசு சொத்துவரியை உயா்த்தியுள்ளதைக் கண்டித்து, சிவகாசியில் பாரதிய ஜனதா கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

தமிழக அரசு சொத்துவரியை உயா்த்தியுள்ளதைக் கண்டித்து, சிவகாசியில் பாரதிய ஜனதா கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகாசி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதில் கட்சியின் மாநில துணைத் தலைவா் ஏ.ஆா். மகாலட்சுமி பேசியது:

இந்த சொத்துவரி உயா்வு மக்களை மிகவும் பாதிக்கும். விடியல் தருகிறோம் எனக் கூறியவா்கள், தற்போது மக்களை தவிக்கவிட்டுள்ளனா். திமுக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. எனவே, சொத்துவரி உயா்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, சொத்துவரி உயா்வைக் கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக பாஜகவினா் கோஷமிட்டனா். இதில் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் அன்புராஜ், கோ. பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.