நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ராஜபாளையம் அருகேயுள்ள துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்தவா் அகஸ்தியா் (28). கடந்த 2018 ஆம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இவா் மீது ராஜபாளையம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அகஸ்தியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதித்து நீதிபதி தனசேகரன் தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.