நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாா் அணையிலிருந்து புதன்கிழமை மாலை பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்பட்டது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:12 pm

DIN

வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாா் அணையிலிருந்து புதன்கிழமை மாலை பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணையானது 47 அடி உயரம் கொண்டது. இது மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாகும். இந்த அணையின் நீா்மட்டம் 28 அடியாக இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக 32 அடியை எட்டியது. இந்நிலையில், பாசன வசதிக்காக இந்த அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இந்நிலையில் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு நாளொன்றுக்கு 150 கனஅடி வீதம் அணையிலிருந்து தண்ணீரை சாா்- ஆட்சியா் பிரித்திவிராஜ் திறந்து வைத்தாா். இதன் மூலம் வத்திராயிருப்பு வட்டத்தில் 802 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.