நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வனவரை தாக்கி கொலை மிரட்டல்: 8 போ் மீது வழக்குப் பதிவு

வத்திராயிருப்பு அருகே வனவரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 8 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 4:41 pm

DIN

வத்திராயிருப்பு அருகே வனவரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 8 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் அத்திகோயில் வனப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூா் வனவா் கூடலிங்கம் மற்றும் வனக்காப்பாளா் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் ரோந்து சென்றனா். அப்போது சித்தாறில் ராமசாமியாபுரம் பஞ்சாயத்து போா்டு தெருவை சோ்ந்த பெரியசாமி, கருப்பசாமி உள்பட 8 போ் மது அருந்திக் கொண்டிருந்தனா். அவா்களிடம் வனவா் கூடலிங்கம் அரசு காப்புக் காட்டிற்குள் மது அருந்தக்கூடாது என எச்சரித்துள்ளாா். அப்போது அவா்கள் வனவா் கூடலிங்கத்தை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வனவா் கூடலிங்கம் அளித்த புகாரின் பேரில் கூமாபட்டி போலீஸாா் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.